Forum Vijaya Blog

Home. Work. Forum.

2019 ஆண்டின் சிறந்த 10 பேஷன் ட்ரென்ட்ஸ்

July 16, 2019

 

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆடை வடிவமைப்பாளர் மற்றும் பேஷன் நிபுணருக்காக 2019ம் வருடத்தின் முதன்மையான பேஷன் விருப்பங்களில் சில இங்கே தரப்பட்டுள்ளது. மரபுக்கேற்ற உடைகள் முதல் நியான் நிறங்கள் வரை 2019ம் வருடத்தில் அணிவதற்கான மிக விருப்பமான உடைகள் இவையே.

மரபுக்கேற்ற உடைகள்

இது மேற்கத்திய உடைகளுக்கு விடை சொல்லிவிட்டு உங்கள் மரபுக்கேற்ற உடைகளை அணிவதற்கான நேரம். உங்கள் மேலாடைகளுக்கு சங்க்கி ஜும்காஸ், கலம்கரி பிரிண்டட் ஜோலாஸ் மற்றும் சில ராஜஸ்தானி ஜூட்டிகளை ஜோடி சேர்த்து அணிந்தால் அது உங்கள் ஒட்டுமொத்த தோற்றத்துக்கு மெருகூட்டும். மரபு சார்ந்த மற்றும் அவற்றுடன் அணியும் உடைகளே 2019ம் வருடத்துக்கான விருப்பமான உடைகளாகும், அவற்றுடன் அணியக்கூடிய பல்வேறு உடைகள் 1, 2 மற்றும் 3ம் நிலைகளில் தெருவோரக் கடைகளில் கிடைக்கின்றன.

பைக் ஷார்ட்ஸ்

நீங்கள் கர்டாஷியானின் ரசிகராக இருப்பின் பைக்கர் ஷார்ட்ஸ் ஒரு புதிய விஷயமாகத் தெரியாது. சௌகரியமான மற்றும் அணிவதற்கு எளிமையான இந்த ஷார்ட்ஸ்கள் 2019ம் வருடத்தில் தீவிரமாக விரும்பப்படுபவையாக உள்ளன. பல்வேறு நிறங்களில் கிடைக்கும் இந்த ஷார்ட்ஸ்கள் மாலை நேரத்தில் உலா செல்லும்போதோ அல்லது அருகிலுள்ள கடற்கரைக்குச் சைக்கிளில் செல்லும்போதோ மிகப் பொருத்தமாக இருக்கும். பல்வேறு வகையான பைக் ஷார்ட்ஸ்களில் பிடித்தமானதைத் தேர்ந்தெடுக்க லைப் ஸ்டைல்செல்லுங்கள்.

நியான் நிறங்கள்

பளிச்சிடும் நியான் நிறங்களை அணிந்து இந்தக் கோடைகாலத்தில் மின்னிடுங்கள். பிங்க், மஞ்சள், பச்சை மற்றும் பழுப்பு ஆகியவையே உங்களை மின்னச் செய்யும் நிறங்கள். கூட்டத்தில் உங்களைத் தனிப்படுத்திக் காட்டச் சிறந்தவழி நியான் நிறங்களே, மேலும் அவை இருட்டிலும் ஒளிரக்கூடியவை. பின்னிரவு நேரங்களில் செல்லும் ஓட்டத்திற்கும், நியான் தீம் பார்ட்டிகளுக்கும் மிகப் பொருத்தமானவை. ஊபர் கூல் வகை நியான் நிற டீ-ஷர்ட்ஸ் மற்றும் ஷார்ட்ஸ்களை மேக்ஸ் ஸ்டோர் சென்று தேர்வு செய்யுங்கள்.

அனிமல் பிரிண்ட்கள்

இந்த வருடத்தில் அனிமல் பிரிண்ட்கள் கிடைக்கின்றன. சீட்டா பிரிண்ட்கள் அல்லது லெப்பேர்ட் பிரிண்ட்கள் எதுவாக இருந்தாலும், இரவில் பார்ட்டிக்காக வெளியில் செல்வதற்கோ அல்லது உங்கள் நண்பர்களைப் பார்க்கச் செல்வதற்கோ இந்த ஆடைகள் மிகவும் பொருத்தமானவை. உடன் அணியக்கூடிய அனிமல் பிரிண்டட் ஆடைகள் உங்கள் உடைகளை ஸ்டைலாக்க மிகச்சிறந்த தெரிவு, குறிப்பாக அவை பிளெய்னாக இருந்தால். உங்கள் பேஷன் விருப்பத்தை வெளிக்காட்ட மார்க்ஸ் & ஸ்பென்சர் ஆடையகத்திற்கு இன்றே செல்லுங்கள்.

 

க்ரோச்செட் டாப்ஸ்

க்ரொச்செட் டாப்ஸ் இந்தக் கோடைகாலத்திற்கு ஸ்டைலான தெரிவு ஆகும். அவற்றை அணிவதற்கு வசதியாக இருப்பது மட்டும அல்லாமல், பலவகை ஸ்டைல்களிலும் அணியலாம். இந்த டாப்ஸ்கள் மிக அழகான டிசைன்களில் தயாரிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட எந்த ஆடையுடனும் சேர்த்து அணிய இயலும். அதை ஸ்கர்ட் அல்லது டிரவுசர்கள் எதுவோடும் சேர்த்து அணிந்துகொண்டு நீங்கள் வெளியே செல்லலாம். மிகச்சிறந்த க்ரொச்செட் டாப்ஸ்களை வெஸ்ட்சைடுஆடையகத்தில் தெரிவு செய்து, எல்லோரும் உங்களைத் திரும்பிப்பார்க்கச் செய்யுங்கள்!

 

ரஃபுல்டு பிளவுஸ்கள்

பூக்கள் பிரிண்டிங் செய்யப்பட்டுள்ள அல்லது பிளெய்னாக உள்ள இந்த ரஃபுல்டு பிளவுஸ்களை அணிந்து எப்பொழுது வேண்டுமானாலும் கோடைகால உணர்வைப் பெறுங்கள். இந்த டாப்ஸ்களை அணிந்து வேலைக்கும் செல்லலாம், பார்ட்டிக்கும் செல்லலாம், இதன் மூலம் 2019 வருடத்தின் பேஷனை எளிதாக வெளிப்படுத்தலாம். அட்டகாசமான ஃப்ளோவி ரஃபுல்டு பிளவுஸ் அணிந்து அழகான தோற்றத்தைப் பெறுங்கள், தற்போதைய பேஷனை வெளிப்படுத்துங்கள். பொருத்தமான ரஃபுல்டு பிளவுஸை வெஸ்ட்சைடு ஆடையகத்தில் தெரிவுசெய்து, அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுங்கள்.

 

டை-டை பிரிண்ட்கள்

டை-டை பிரிண்ட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மற்றும் மிகவும் ஸ்டைலானவை. பளிச்சிடும் நிறங்கள் மற்றும் மதிமயக்கும் பிரிண்ட்களுடன், கோடையில் அதிரச் செய்ய இவை மிகப்பொருத்தமானவை. இன்றே லைப்ஸ்டைல் ஆடையகத்திலுள்ள உலகளாவிய உள்ளூர் ஆடைகளைத் தேர்ந்தெடுத்து நகரத்தின் மிகச்சிறந்த டை-டை பிரிண்ட்களை அணிந்திடுங்கள்!

 

 ஆண்களுக்கான கலர் பிளாக்கிங்

பொருந்தும் நிற ஆடைகளை அணிவது மிகச்சிறந்த வழியாக இருப்பினும், அந்த நிறங்களின் கலவை பல இதமான விளைவுகளைத் தரும். தனித்துவமாகவும், கம்பீரமாகவும் உள்ள இந்த ஆடைகள் கட்டாயம் 2019ம் வருடத்தின் விருப்பமாக இருக்கும். இந்த 2019ம் வருடத்தில் சர்ட்ஸ் மற்றும் டீ-சர்ட்ஸ் மூலம் கலர் பிளாக்கிங் செய்ய இந்தியன் டெரெய்ன் ஆடையகம் செல்லுங்கள்.

 

ஸ்டேட்மென்ட் ஸ்லீவ்ஸ்

நளினமாகவும், அழகாகவும் தொங்கும் இந்த ஸ்டேட்மென்ட் ஸ்லீவ்ஸ் மூலம் கூடுதல் அழகைப் பெறுங்கள். பெல்-ஸ்லீவ்ஸ் அல்லது பலூன் ஸ்லீவ்ஸ் எதுவாக இருப்பினும், இவை கோடை காலத்திற்கு ஏற்ற மிகப்பொருத்தமான தெரிவுகள். அழகான இந்த ஸ்லீவ்ஸ்களை வாங்க டபிள்யூ ஃபார் விமென்ஆடையகத்திற்குச் செல்லுங்கள்.

 

மேரிகோல்டு மஞ்சள்

இந்த வருடத்தின் மிகவும் விருப்பமான நிறம் மேரிகோல்டு மஞ்சள் ஆகும். மிகவும் கண்ணை உறுத்தாமலும், மிகவும் மந்தமாகவும் இல்லாத இந்த நிறம், 2019ம் வருடத்தின் மிகப்பொருத்தமான நிறமாகும். கிட்டத்தட்ட எந்த ஆடையுடனும் அணியக்கூடிய, 2019ம் வருடத்தின் பேஷன் விருப்பமாக உள்ள இந்த ஆடை கிடைக்கும் இடம் ஃபேப்இந்தியா.
2019ம் வருடத்தின் பேஷன் விருப்பங்கள் பற்றி மேலும் அறிய ஃபோரம் விஜயா மால் சென்று ஆச்சரியமூட்டும் சலுகைகளையும்பிறவற்றையும் பெறுங்கள்.